பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் KGF 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாவது பாகமும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தை தாண்டி தமிழ்நாடு மற்றும் பாலிவுட்டில் செம வசூல் வேட்டை நடத்தியது. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்போதும் பல மொழிகளில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் KGF 2 படத்தை அண்மையில் பார்த்த இயக்குனர் ஷங்கர் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குனர் ஆரம்பித்து நடிகர், ஆக்ஷன் காட்சிகளின் இயக்குனர் என அனைவரையும் பாராட்டி டுவிட் போட்டுள்ளார்.