தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி வெளியிட்டு தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பே இவர் 2010-ஆம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு படத்தில் ‘நீல வானம்’ என்ற பாடலை எழுதி ஹிட் கொடுத்தார். இவர் எக்கச்சக்கமான பாடல்களையும் பாடி ரசிகர்களுக்குப் பிடித்த பாடகராகவும், நடன ஆசிரியராகவும், உதவி ஒப்பனை கலைஞராகவும், தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியவர்.