“மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!

அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் மனநிறைவோடு செல்ல வேண்டும் என்பதால் தனது ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்களுக்கு திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு சென்று வருகிறார். அண்மையில்கூட தேனி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று திருச்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி அலுலகம் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வுகளால் அரசு அலுவலகங்கள் எந்நேரமும் கவனமாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *